நான் குரும்பை ஜந்து நண்பா கொண்டு வந்தேன்
நல்ல ஈர்க்கு எட்டுக் கொண்டு வாரும்
ஏனெனில் இன்றைக்குத் தேரொன்று செய்துமே
இழுத்து விளையாடி இன்புறுவோம்
பூக்கள் கொண்டு வாரும் பொலிவாகச் சூட்டுவோம்
பூதனும் நாதனும் மேளதாளம்
பாக்குடன் வெற்றிலை பழவகை வைத்துமே
பண்பாகப் பூசனை செய்திடுவோம்
வெள்ளை சிவப்பு நிறக்கட தாசிகள்
விளங்கிட ஒட்டி அமைத்துள தேர்
கொள்ளை அழகு கொடுக்குது பாருங்கள்
பிள்ளைகளே ஓடி வாருங்களே.
பாலனும் வேலனும் பாட்டுக்கள் பாடுங்கள்
பசுபதி ஆனந்தக் கூத்தை ஆடும்
பாலரே சாமியைப் பார்த்து வணங்கிடப்
பாய்ந்து வாரும் தேர் போய் விடுமே.
முரசொலி 05.02.1989